அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அதிபர் பர்வேஸ் முஷாரஃப், நீதிபதி வாஜிஹுதீன் அகமது, மக்தூம் அமின் ஃபாகிம் உட்பட 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தேர்தல் ஆணையச் செயலகத்தில் 15 வேட்பாளர்கள் 41 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். பஞ்சாப்பில் 11 வேட்பாளர்கள் 12 வேட்பு மனுக்களையும், சிந்துவில் 14 வேட்பாளர்கள் 15 வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். பலுசிஸ்தானில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களின் பரிசீலனை நாளை நடக்கிறது.