பத்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயார்க்கில் நேற்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தாய்நாட்டிற்காகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கான இந்தியாவின் ஆதரவை பிரணாப் வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றியும், அமைதிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி பிரணாப்பிடம் அப்பாஸ் சுருக்கமாகத் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை, இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரணாப் வலியுறுத்தினார்.