பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைசைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்தும், பல்வேறு விவகாரங்களில் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்துக் கொண்டனர். மேலும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த பேச்சிற்குப் பிறகு "இது ஒரு நல்ல சந்திப்பு" என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இச்சந்திப்பின்போது சிக்கலுக்குரிய அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.