ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள யாசூ ஃபுகுடா இன்று காலை அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது 71 வயதாகும் ஃபுகுடாவைப் புதிய தலைவராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி தேர்வு செய்திருந்தது. பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ஃபுகுடா அதிக வாக்குக்களைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புகுடா அதிகாரபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முன்னாள் பிரதமர் சின்சோ அபெயின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலரின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.