உலகிலேயே காட்டுத் தீ அதிக அளவில் பாதிக்கும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. உலகம் வெப்பமயமாதலின் விளைவாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ எரியும் நாட்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த ஆய்வின்படி, 2050ஆம் ஆண்டுவாக்கில் விக்டோரியா மாநிலம் காட்டுத் தீயினால் உணரும் வெப்பத்தின் அளவு 31 விழுக்காடு அதிகரிக்கும். இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மெல்பர்ன் நகரம் காட்டுத் தீயினால் பாதிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காட்டுத் தீ ஆய்வுக் கூட்டமைப்பு, பருவநிலை ஆய்வு மையம், வானியல் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் காட்டுத் தீயின் பாதிப்பைக் குறைக்க முடியாது என்று பருவநிலை ஆய்வு மைய முதன்மைச் செயலர் ஜான் கொனர் கூறியுள்ளார்.