தெற்கு ஆஃப்கானிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 இறந்தனர், மேலும் 39பேர் படுகாயமடைந்தனர்.
காந்தகாரில் இருந்து தலைநகர் காபூலுக்கு வருகின்ற நெடுஞ்சாலையில் நேற்றிரவு இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் வன்முறையாளர்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது என்று காவல்துறை அதிகாரி குலாம் ஜிலானி கூறியுள்ளார்.