பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரஃப்பிற்குஎதிராக ஓய்வு பெற்ற நீதிபதி வாஜீஹுதீனை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நிறுத்தியுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தாரிக் முகமது இன்று இதை அறிவித்தார்.
அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று, நீதிபதி வாஜீஹுதீன் அகமதுவும் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று நீதிபதி தாரிக் முகமது கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை கருதப்படுகிறது.