வருகிற 25ஆம் தேதி தொடங்கவுள்ள 62வது ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நியூயார்க் புறப்பட்டு சென்றார். அவர் 26ஆம் தேதி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார்.
அப்போது, இலங்கையில் நடைபெற்றுவரும் இனப் படுகொலைகளை தடுப்பதற்காக தான் எடுத்துவரும் அமைதி முயற்சிகளை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபருடன் அமைச்சர்கள் சிபி.ரத்நாயக, டிபி.எகநாயக, சம்பிகா ரணவாகா மற்றும் அணுரா பிரியதர்சனா ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் நியூயார்க்கில் தங்கியிருக்கும்போது சர்வதேச தலைவர்களை சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையில், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் நியூயார்க் செல்கிறார். அங்கு 24ஆம் தேதி நடைபெறவுள்ள பில் கிளிண்டன் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.