சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்களின் ஒப்பந்த காலம் முடிந்தபிறகும் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கக் கூடாது என்று ஐக்கிய அரபு நாடுகள் புதியவிதியை இயற்றியுள்ளதே இதற்கு காரணமாகும்.
"ஐக்கிய அரபுக் நாடுகளில் 20ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு நலத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது" என்று நலத்துறை அமைச்சர் மருத்துவர் ஹமாது அலி மணி கூறியுள்ளதாக துபாய் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது, சவுதி மருத்துவர்கள் பலர் வெளிநாடுகளில் தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் 43 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் 73 விழுக்காடு மருத்துவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஒப்பந்தம் முடிந்த மருத்துவர்கள் தங்கள் ஒப்பந்தங்களை புதுப்பித்து கொள்ள மண்டல மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த உதவித் துணையமைச்சர்களை அணுக வேண்டும்.
ஐக்கிய அரபு நாடுகள் 200 மருத்துவமனைகளையும், 2000 தொடக்க நலவாழ்வு நிலையங்களையும் நடத்துகிறது. இந்த மருத்துவமனைகளில் வசதிகளை ரூ.1000 கோடி முதலீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.