சியாச்சின் பனிமலையில் சுற்றுலா மலையேற்றத்திற்கு இந்தியா அனுமதியளிப்பது இருதரப்புப் பேச்சைப் பாதிக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்சீத் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.
’’சியாச்சின் பனிமலையில் சுற்றுலா மலையேற்றத்திற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இந்தியாவின் இந்த நடவடிக்கை இருதரப்புப் பேச்சையும் பாதிக்கக்கூடும் என்று நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்’’ என்று கசூரி கூறியுள்ளார்.
காஷ்மீர் சிக்கலில் மக்களின் விருப்பத்திற்கு எதிரான எந்தத் தீர்வையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அவர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்த விசயத்தில் அம்மக்களின் நம்பிக்கைக்கு உரியவகையில் நாங்கள் நடந்துகொள்வோம். நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர், சியாச்சின், வணிகம், தீவிரவாதம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு விசயங்கள் பேசப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.