அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு உலகிலேயே சிறந்தது என்று யார் சொன்னது என்று ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் கிம் பீஸ்லே கேள்வி எழுப்பியுள்ளார்!
கடந்த 1980 ஆம் ஆண்டு தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அமெரிக்கப் போர்ப் படை விமானங்களின் மிக இரகசியமான சங்கேத வார்த்தைகளை உடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமெரிக்க விமானங்களை வேவு பார்த்தோம், அவற்றின் குறியீடுகளைப் பிரித்தெடுத்தோம் என்று பீஸ்லே கூறியதாக சண்டே மார்னிங் ஹெரால்டு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1984 முதல் 1990 வரை பீஸ்லே பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ஆஸ்திரேலிய ராடார்கள் சரிவரச் செயல்படாமல் திறன் குறைந்தவையாக இருந்ததைக் கண்டார். குறிப்பாக வேறு நாட்டு விமானங்களை அடையாளம் காணமுடியாத நிலையில் அவை இருந்தன.
இதையடுத்த அமெரிக்கா சென்ற பீஸ்லே அங்கிருந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு வகையான அமெரிக்க விமானங்களின் ராடார் குறியீடுகளைக் கண்டுபிடித்தார். அவற்றை வைத்து ஆஸ்திரேலியாவிற்கு ராடார் தயாரித்தார்.
அமெரிக்கர்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய எதிரியாக இருந்த நேரத்தில், பெரும் சிக்கலுக்கிடையில் இக்காரியம் செய்து முடிக்கப்பட்டது.
அமெரிக்கர்கள் சொல்வதைப் போல அவர்கள் தங்கள் குறியீடுகளைத் தரவில்லை. ஆனால் நாங்கள் அந்தக் குறியீடுகளை உடைக்க முயற்சித்தோம். எனவே அவற்றை எங்களால் சிறப்பாகப் பயன்படுத்த முடிந்தது என்று பீஸ்லே குறிப்பிட்டுள்ளார்.