சுனாமி எச்சரிக்கை விலக்கல்!
, புதன், 12 செப்டம்பர் 2007 (21:24 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது!இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணியளவில் இந்தோனேஷியாவின் வடமேற்கே உள்ள பென்குலு எனும் கடலோர நகரத்திற்கு அருகே கடற்பகுதியில் 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனையடுத்து இந்தோனேஷியா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக எந்தவிதமான கடல் கொந்தளிப்பும் இல்லாததையடுத்து, சுனாமி பேரலை தாக்கும் அபாயம் இல்லை என்றும், சுனாமி எச்சரிக்கையை விலக்கிக்கொள்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுனாமி பரபரப்பு காட்சிகள்!