Newsworld News International 0709 11 1070911017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மூழ்கடிப்பு : 45 புலிகள் பலி - சிறிலங்கா!

Advertiesment
விடுதலைப் புலிகள் சிறிலங்க கடற்படை

Webdunia

, செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (16:17 IST)
இலங்கையில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விடுதலைப் புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்ததாகவும், 45 புலிகளை கொன்றுள்ளதாகவும் சிறிலங்க கடற்படை தளபதி வாசந்தா காரன்னகோடா கூறியுள்ளார்!

ஆயுதங்களையும், இலகு ரக விமானங்களையும் ஏற்றிக்கொண்டு விடுதலைப் புலிகளின் 3 படகுகள் வடக்கு நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிறிலங்க கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் 3 படகுகளும் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து புலிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் காரன்னகோடா கூறியுள்ளார்.

சிறிலங்க கடற்படைத் தளபதியின் இச்செய்தி குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இதற்கிடையே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மீது சிறிலங்க விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil