Publish Date: Sun, 09 Sep 2007 (13:24 IST)
Updated Date: Sun, 09 Sep 2007 (13:23 IST)
பாகிஸ்தானின் ஒரு சிலப் பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை 7.31 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
பூமத்திய ரேகையில் இருந்து 30.9 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 70 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை