பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜீயா மற்றும் அவரது இளைய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை 7.45 மணிக்கு கைது செய்யப்பட்ட கலிதா ஜீயா மற்றும் அவரது மகன் அராஃபத் ரஹ்மானை தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி முன்பு காவல்துறையினர் நேர்நிறுத்தினர்.
2001-2006 வரை வங்தேக பிரதமராக இருந்த கலிதா ஜீயா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது மகனின் வியாபாரத்திற்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார் என்றும், அரசு ஊழியர்களை மகனின் வியாபாரத்திற்காக பணியாற்ற வைத்திருக்கிறார் என்றும் கூறி தேஜ்கான் காவல்நிலையத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கலிதா ஜீயா, அவரது மகன் உட்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.