Publish Date: Sun, 26 Aug 2007 (15:20 IST)
Updated Date: Sun, 26 Aug 2007 (15:20 IST)
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அதிபர் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முடிவெடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கான அதிபர் தேர்தலை அக்டோபர் மாதத்தில் நடத்த முஷாரஃப் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தானில் முஷரப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அவர் ராணுவ தளபதி பதவியும் வகித்து கொண்டு அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
எனவே எதிர்ப்பு அதிகரிக்கும் முன்பே அதிபர் தேர்தலை அதிரடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என முஷாரஃப் முடிவு செய்துள்ளார்.
அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.