பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 100 பேரும், 35 கைதிகளும் நாளை விடுதலை செய்யப்படுகின்றனர். இவர்களை வாகாக் அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கிறது.
இந்திய - பாகிஸ்தான் உள்துறை செயலாளர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை கடந்த ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில் இருநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள், கைதிகளை ஒருவருக்கொருவர் ஒப்படைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 மீனவர்கள், 35 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் துணை உயர் ஆணையர் அப்ரஷைப் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் வாகாக் அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர்கள், கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.