ந்தியாவின் அணு மின் உலைகளுக்கு யுரேனியம் விற்க ஆஸ்ட்ரேலிய அரசு சாதகமாக ஆலோசித்து வரும் நிலையில் அதற்கு ஆஸ்ட்ரேலிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.
இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கினால் அது என்.பி.டி. உடன்படிக்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாகும் என்றும், அது என்.பி.டி.யின் சட்டபூர்வமான இலக்கிற்கே பாதகமாக முடியும் என்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் மெக்கீலன் கூறியுள்ளார்.
என்.பி.டி.யில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் விற்றால் அதே அடிப்படையில் தங்களுக்கும் யுரேனியம் விற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்கும் என்றும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ராபர்ட் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவி்ட்ட நிலையில் அதே அடிப்படையில் இதியாவிற்கு அணு எரிபொருள் வழங்க ஆஸ்ட்ரேலியாவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தருவதால் சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் தீவிரம் குறையும் என்று ஆஸ்ட்ரேலியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.
இந்தியா - ஆஸ்ட்ரேலியா இடையே யுரேனியம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்த அறிவிப்பை ஆஸ்ட்ரேலிய அரசு வெளியிட உள்ள நிலையில், தொழிலர்ளர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அணுசக்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் ஊக்கத்தை குறைக்கும் வகையில் அமையும். இதனால் சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தேக்கம் ஏற்படும்.