Publish Date: Tue, 07 Aug 2007 (20:27 IST)
Updated Date: Tue, 07 Aug 2007 (20:27 IST)
அணு ஆராய்ச்சி பிரச்சனையில் உலக நாடுகளின் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள ஈரானுடனான பொருளாதார உறவுகளை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார்!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நிக்கோலாஸ் பர்ன்ஸ், இந்தியா, சீனா, ·பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளும் ஈரானுடனான பொருளாதார உறவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சர்வதேச அளவில் எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான பாதுகாப்புப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 07 Aug 2007 (20:27 IST)
Updated Date: Tue, 07 Aug 2007 (20:27 IST)