Publish Date: Mon, 06 Aug 2007 (17:49 IST)
Updated Date: Mon, 06 Aug 2007 (17:48 IST)
ஈராக்கில் இன்று தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கின் வடக்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தால் அபர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய லாரியை வெடிக்கச் செய்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 22 க்கும் மேற்பட்ட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.