ஜப்பானின் நாகசாகில் அணு குண்டு வீசிய 62 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதில் பலியான 2 லட்சம் பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1945 ஆம் ஆண்டு நடந்த 2-ம் உலகப் பேரின் போது ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தக்குதல் நடத்தியது.
அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். இன்னமும் அணுகுண்டு கதிர் வீச்சின் பாதிப்பில் இருந்து ஜப்பான் மக்கள் மீளவில்லை.
ஹிரோஷிமோ, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்ட நினைவு பூங்கா நோக்கி அமைதி பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் ஜப்பான் பிரதமர் சின்ஷோ ஆபி கலந்து கொண்டு உயிர் இழந்தவர்கள் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.