Publish Date: Sat, 04 Aug 2007 (18:51 IST)
Updated Date: Sat, 04 Aug 2007 (18:51 IST)
பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷிரிஸ்தான் பகுதி அருகே இராணுவ சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி மீது இன்று தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 10 தாலிபான் தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் வாஹீத் அர்சாத் தெரிவித்தார்.
இதேபோல், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரசினார் பகுதியில் உள்ள சந்தையில் பயங்கர சத்தத்திடன் கார் குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த அப்பாவி பொது மக்கள் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
37 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Sat, 04 Aug 2007 (18:51 IST)
Updated Date: Sat, 04 Aug 2007 (18:51 IST)