Publish Date: Wed, 01 Aug 2007 (18:15 IST)
Updated Date: Wed, 01 Aug 2007 (18:15 IST)
பாக்தாத்தின் மையப்பகுதியில் இன்று காலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாக்தாத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குண்டு இன்று காலை சுமார் 10.15 மணி அளவில் பயங்கர சத்ததுடன் வெடித்தது.
இதில் அருகில் இருந்த மூன்று சிறிய பேருந்துகள், 6 கார் தீப்பிடித்து எரிந்தது. குண்டு வெடிப்பு பகுதியில் இருந்த பொது மக்கள் 17 பேர் உடல் சிதறி பரிபாதமாக உயிரிழந்தனர். மேலும் 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கார் குண்டு வெடிப்பு அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தீ அங்கு பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் விபத்து நடந்த பகுதியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.
பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள சபெஸ்ட் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.