Publish Date: Fri, 13 Jul 2007 (16:12 IST)
Updated Date: Fri, 13 Jul 2007 (16:12 IST)
சிறிலங்காவின் கிபீர் ரக போர் விமானத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழர்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா ராணுவத்தினர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
வவுனியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது சிறிலங்க ராணுவத்தின் கிபீர் ரக போர் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும். அப்போது விடுதலைப்புலிகள் விமான எதிர்ப்புத் துப்பாக்கியால் சுட்ட்டதில் அந்த போர் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தாக்குதலில் நொறுங்கிய விமானங்களின் பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விழுந்தது என்றும். நொறுங்கிய நிலையில் விமானம் சிறிலங்க ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Fri, 13 Jul 2007 (16:12 IST)
Updated Date: Fri, 13 Jul 2007 (16:12 IST)