Publish Date: Sun, 08 Jul 2007 (13:44 IST)
Updated Date: Sun, 08 Jul 2007 (13:43 IST)
திரிகோணமலை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடற்புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்தின் கடற்படைக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துள்ளது.
கடற்பகுதியில் 15 கடற்புலிகளின் படகுகள் சென்று கொண்டிருப்பதை அறிந்த சிறிலங்க கடற்படையினர், உடனடியாக படகுகள் மீது அதிவேக தாக்குதல் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்கு கடற்புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர் என்று சிறிலங்க பாதுகாப்பு அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே நேரத்தில் திரிகோணமலை மாவட்டம் கல்லாறுப் பகுதியிலும் தரைப்படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்க கப்பற்படை இந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இரு தரப்பினருக்கும் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளது.