Newsworld News International 0707 07 1070707031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து பதற்றம் : 5 வது நாளாக சண்டை நீடிப்பு

Advertiesment
பாகிஸ்தான் லால் மசூதி

Webdunia

, சனி, 7 ஜூலை 2007 (20:19 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதி அருகே ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் சண்டை நீடித்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் இருக்கும் மதராசா பள்ளி மாணவர்களும், தீவிரவாதிகளும் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ராணுவத்துக்கும், மசூதியில் உள்ள மாணவர்களுக்கும் இடையே இன்று 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பயங்கர வெடிகுண்டுகளை ராணுவத்தினர் மீது வீசி வருகிறார்கள்.

மசூதியின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் சப்ளை ஆகியவற்றை ராணுவம் துண்டித்து விட்டது. மேலும், மசூதியின் சுவற்றை ராணுவம் குண்டு வைத்து தகர்த்தது. மசூதியின் மகுருக்கள் நடத்தி வந்த பள்ளி ஒன்றையும் ராணுவம் கைப்பற்றி உள்ளது.

ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து நடைபெற்றுவரும் சண்டையால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil