Publish Date: Tue, 03 Jul 2007 (20:14 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (20:02 IST)
இங்கிலாந்து கிளாஸ்கோவ் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலைத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஜீப் ஒன்று விமான நிலைய கட்டிடக்தின் மீது மோதி தீபிடித்து எறிந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த தாக்குதலில் இந்திய மருத்துவர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவாட் தெரிவித்தார்.
மெல்போர்னில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இங்லாந்து விமான நிலைய தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் முகமத் ஹனீப் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இருப்பதாக தெரிவித்தார்.
முகமத் ஹனீப் கைது செய்யப்பட வில்லை என்றும், அவர் மீது எந்த வழக்கு பதிவு செய்யப்பட வில்லை என்றும் அவர் கூறினார்.