Newsworld News International 0707 01 1070701006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

Advertiesment
இங்கிலாந்து விமான நிலையத்தில் ஜீப் தீ பற்றியது

Webdunia

, ஞாயிறு, 1 ஜூலை 2007 (16:16 IST)
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஜீப் விமான நிலைய கட்டிடத்தின் மீது மோதி தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் கேர்டன் பிரவுன் கூறுகையில், விமான நிலையத்தை தகர்க்க சதி எதுவும் நடக்கவில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே, இங்கிலாந்து விமான நிலையத்திற்குள் ஜீப் நுழைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil