Publish Date: Tue, 26 Jun 2007 (12:23 IST)
Updated Date: Tue, 26 Jun 2007 (12:22 IST)
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா உட்பட எந்த அயல்நாடும் தலையிடக் கூடாது என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினை என்பது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் இந்தியா, பாகிஸ்தான், நார்வே என்று எந்த நாடாக இருந்தாலும் தலையிடக் கூடாது. அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினையையே அவர்களே தீர்த்துக் கொள்ள விட்டுவிட வேண்டும் என்று கொழும்புவில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் தூதர் ஷாஜாத் ஏ செளத்ரி கூறியுள்ளார்.
"எந்த அயல்நாடும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாது" என்று கூறியுள்ள பாகிஸ்தான் தூதர், தனது உள்நாட்டு சிக்கலுக்கு தீர்வு கண்டு உலக நாடுகளுக்கு இடையே தனக்குரிய இடத்தை சிறிலங்கா போராடி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.