Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான கட்டமைப்பு மேம்பாட்டு ஒப்பந்தம் : இந்தியா-அமெரிக்கா கையெழுத்து

விமான கட்டமைப்பு மேம்பாட்டு ஒப்பந்தம் : இந்தியா-அமெரிக்கா கையெழுத்து

Webdunia

, வெள்ளி, 22 ஜூன் 2007 (14:37 IST)
இந்தியாவின் விமானப் பயணிகள், சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதை சமாளிக்கும் வகையில் நமது நாட்டின் விமான போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது!

வாஷிங்டனில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலும், அமெரிக்க போக்குவரத்து துறை செயலர் மேரி பீட்டர்சும் கையெழுத்திட்டனர்.

இது, இரு நாட்டு விமானத்துறை, பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேம்பாட்டை ஏற்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், விமான சேவை தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் விமான சேவை செயல் திறனை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

பயணிகளின் எண்ணிக்கை, தேச, சர்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil