Newsworld News International 0706 20 1070620022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சியாச்சின் : இந்திய நிலைகளை அங்கீகரிக்க பாகிஸ்தான் மறுப்பு!

Advertiesment
சியாச்சின் பாகிஸ்தான் இந்தியா

Webdunia

, புதன், 20 ஜூன் 2007 (20:27 IST)
சியாச்சின் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன் அங்கு இந்தியப் படைகள் தற்பொழுதுள்ள நிலைகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்துவிட்டது!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நம்பிக்கையூட்டும் முயற்சிகளின் ஒரு அங்கமாக, உலகின் மிக உயர்ந்த போர் முனை என்று கருதப்படும் சியாச்சின் மலைப் பகுதியில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதுவரை பலமுறை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சியாச்சின் மலைப் பகுதியில் நமது படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை யதார்த்த நிலைக்கோடாக பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அங்கிருந்து படைகளை இந்தியா திரும்பப் பெறும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறிய பாகிஸ்தான் அயலுறவு பேச்சாளர் தஸ்னீம் அஸ்லாம், இப்படிப்பட்ட கடினமான நிலைப்பாட்டை ஏற்கனவே பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது என்றும், அதையே மீண்டும் பேசுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

சியாச்சின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் இருதரப்பிற்கும் உகந்த யதார்த்த திட்டத்தை பாகிஸ்தான் அளித்துள்ளது என்றும், அது குறித்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு சூழ்நிலையை மேலும் உக்கிரப்படுத்தும் ஆபத்தை தவிர்க்க இறங்கிவந்து பேச வேண்டும் என்று தஸ்னீம் அஸ்லாம் கூறியதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் டான் எனும் ஆங்கில நாளிதழ் வெளிவந்துள்ளது. (பி.டி.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil