பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தினர் சென்ற வாகனத்தை குறிவைத்து நடந்த தாக்குதலில் 6 ராணுவத்தினர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
பலுசுஸ்தான் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு ராணுவத்தினர் சென்ற வாகனத்தை நோக்கி அடையாளம் தெரியாத சிலர், சரமாரியாக சுட்டதாகவும், இதில் ராணுவ வீரர்கள் 6 பேரும், ஒரு காவலரும், இரண்டு அப்பாவிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவத்தின் துணை தளபதி வாகீத் ஹர்சாத் கூறியுள்ளார்.
இத்தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று தடைசெய்யப்பட்ட பலுசுஸ்தான் விடுதலை அமைப்பு கூறியுள்ளது.(பி.டி.ஐ)