குட்ரோக்கி வழக்கு தொடர்பான செலவுகள் அனைத்தையும் வழங்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ) அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான குட்ரோக்கி, பிரேசில் செல்ல முயன்ற போது அர்ஜெண்டினா விமான நிலையத்தில் சர்வதேச காவற்படையால் கைது செய்யப்பட்டார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் அவரை விசாரிக்க இந்தியா கொண்டு வருவதற்காக இரண்டு பேர் அடங்கிய ம.பு.க. குழு அர்ஜெண்டினா சென்றது. ஆனால், அதற்கு முன்பு குட்ரோக்கி பிணையில் வெளிவந்தார்.
இதனைதொடர்ந்து, குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி சிபிஐ தரப்பில் அர்ஜெண்டினா நீதிமன்றத்தில் ம.பு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி ம.பு.க. தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ள அர்ஜெண்டினா நீதிமன்றம், குட்ரோக்கி வழக்கு தொடர்பான் செலவுகள் அனைத்தையும் ம.பு.க. அவருக்கு வழங்கிட வேண்டுமென்று அர்ஜெண்டினா நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.