வங்கதேசத்தில் பெய்துவரும் கன மழைக்கு 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் சிட்டகாங் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் மின் இணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் சிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், மக்கள் மேடான பகுதிக்கு சென்றுள்ளனர். ராணுவமும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.