நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு இந்தியப் பொறியாளர்கள் 25 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்!
நைஜிரீயாவில் உள்ள இண்டோராமா எனும் இந்தோனேஷியா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த டெபாஷிஸ், சுனில் தாவே ஆகிய இரண்டு பொறியாளர்களும் கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து அவர்கள் இரண்டும் பேரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக பொறியாளர் டெபாஷிஸ் ககோட்டியின் தந்தை அஜீத் ககோட்டி செய்தியாளர்கள் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட இருவரும் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அஜீத் ககோட்டி கூறியுள்ளார்.
இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டதன் எதிரொலியாக நைஜீரியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த 160க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். (பி.டி.ஐ.)