கொழும்புவில் இருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றியது பெரும் தவறு என்றும், அதற்காக சிறிலங்க அரசு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்நாட்டுப் பிரதமர் ரத்னசிறி விக்மசிங்கே கூறியுள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமசிங்கே, காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த தவறான நடவடிக்கைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்பதாகவும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் இதற்குமேல் நடைபெற அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்.
"அரசு அதிகாரிகள் நல்லது செய்யும் போதெல்லாம் அந்த பெருமை அரசுக்கே சேருகிறது. அதுபோலவே அவர்கள் தவறு செய்யும் போதும் அதனால் ஏற்படும் அவப்பெயர் அரசுக்கே சேர்கிறது. அதிகாரிகள் செய்த தவறாக இருந்தாலும் அதற்காக அரசு முழுப் பொறுப்பேற்கிறது. இந்த உணர்வுடன் தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றும் தவறான நடவடிக்கைக்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்கிறது" என்று விக்ரமசிங் கூறினார்.
(யு.என்.ஐ.)