Newsworld News International 0706 09 1070609003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்ரோக்கி இந்தியா கொண்டுவர தடை: அர்ஜெண்டினா நீதிமன்றம் தீர்ப்பு

Advertiesment
குட்ரோக்கி இந்தியா கொண்டுவர தடை

Webdunia

, சனி, 9 ஜூன் 2007 (10:49 IST)
போபர்ஸ் ஆயுத பேர ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க அர்ஜெண்டினா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போபர்ஸ் ஊழல் வழக்கியில் இத்தாலியை சேர்ந்த தொழில் அதிபர் குட்ரோக்கி தேடப்பட்டு வந்தார். இவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உறவினர் ஆவார். இந்நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி பிரேசில் செல்ல முயன்ற போது அர்ஜெண்டினா விமான நிலையத்தில் குட்ரோக்கி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, குட்ரோக்கியை இந்தியா கொண்டுவர இரண்டு பேர் கொண்ட சிபிஐ குழு அஜெண்டினா சென்றது. ஆனால் அதற்கு முன் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதைதொடர்ந்து, குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி அர்ஜெண்டினா நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹரிசிதோய், குட்ரோக்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறினார். மேலும், குட்ரோக்கி 18 ஆம் தேதி வரை அஜெண்டினாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனால் குட்ரோக்கியை இந்தியா கொண்டு வருவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil