Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பான் நடன மங்கை பிரபஞ்ச அழகி!

Advertiesment
ஜப்பான் நடன மங்கை பிரபஞ்ச அழகி!

Webdunia

ஜப்பான் நாட்டின் 20 வயது நடன மங்கை ரயோ மோரி 2007 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டியில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரேசில் நாட்டின் நாட்டாலியா 2வது இடத்தைப் பெற்றார்.

வெனிசுலாவின் லீ ஜோனாய்டிஸ், கொரியாவின் ஹனி லீ ஆகியோர் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்தனர்.

நேற்று மாலை நடந்த முழு ஆடை அணிந்து ஒயிலாக நடந்துவரும் போட்டியில் தடுக்கி விழுந்த அமெரிக்க அழகி ரேச்சல் ஸ்மித் 5வது இடத்தைப் பிடித்தார்.

பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட ஜப்பான் அழகிக்கு கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான சுலேகா ரிவேரா வைர கிரீடத்தை அணிவித்தார். அதன் மதிப்பு 2,50,000 அமெரிக்க டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil