Newsworld News International 0705 16 1070516024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர் கிரீக் : இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை!

Advertiesment
சர் கிரீக் இந்தியா பாகிஸ்தான்

Webdunia

குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமைந்துள்ள சர் கிரீக் தீவுத் தொடர்கள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இந்திய-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை இலாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்!

இந்திய நில அளவைத் துறையின் தலைவர் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜென்ரல் கோபால் ராவ் தலைமையிலான இந்தியக் குழு இன்று ராவல்பிண்டிக்கு வந்துள்ளது.

இக்குழு நாளை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலரும் கடற்படைத் துணைத் தளபதியுமான தன்வீர் ஃபை தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

சர் கிரீக் தீவுத் தொடர்களை கடந்த ஜனவரியில் இந்திய- பாகிஸ்தான் நில அளவைத் துறையின் அதிகாரிகளும் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ஒன்றாக நில அளவை செய்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு நாளை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil