Newsworld News International 0705 16 1070516013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெஷாவர் விடுதியில் குண்டு வெடிப்பு : 24 பேர் பலி!

Advertiesment
பெஷாவரில் குண்டு வெடித்ததில்

Webdunia

பாகிதானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலைநகர் பெஷாவரில் உள்ள விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 24 பேர் பலியாயினர்!

நேற்று பகல் 12.30 மணிக்கு மதிய உணவு நேரம் என்பதால் அந்த விடுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது குண்டு வெடிப்பு சம்பவம் நேரிட்டதால் பலியானோர் எண்ணிக்கை அதிகமானது.

இந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை 2 பெண்கள் உட்பட 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தகவலை அந்நாட்டு மாநில செய்தித் துறை அமைச்சர் ஆசிஃப் இக்பால் தாவூத் சாய் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil