அமெரிக்காவின் கறுப்பு மலைகளில் யுரேனியம்! கார்ப்பரேட் சுரண்டல்கள்!
, வெள்ளி, 7 மார்ச் 2014 (19:11 IST)
வட அமெரிக்காவின் மகா சமவெளியில், அதாவது மேற்கு டகோடா பகுதியில் ஒரு தனியான சிறிய மலைத்தொடர் உள்ளது. அதுதான் பிளாக் ஹில்ஸ் என்று அழைக்கப்ப்டுகிறது.
இதன் சிகரம் ஹார்னி சிகரமாகும் இதன் உயரம் 7,244 அடி. இந்த மலைகளில் காணப்படும் இயற்கை கனிம வளங்களை, குறிப்பாக யுரேனியத்தை ஆபத்தான முறையில் சுரண்டி எடுக்கும் நடை முறை அங்கு நடந்தேறி வருகிறது.இங்கு பூர்வக்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குதான் உலகில் முதல் மனித இனம் தோன்றியதாக கதை வழி புரிதல் உண்டு.
பூர்வக்குடியினரின் சடங்கு சம்பரதாயங்கள் இந்த மலைகளில்தான் காலங்காலமாக நடந்து வருகிறது. இன்று இங்கு காணப்படும் யுரேனிய தாதுக்களுக்காக கார்ப்பரேட் கழுகுகள் அங்கு வட்டமிடத் தொடங்கியுள்ளன.