Publish Date: Tue, 07 May 2013 (12:06 IST)
Updated Date: Tue, 07 May 2013 (12:04 IST)
கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வே ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களிடையே பெரிய மாறுதல் ஏற்படக் கூடும் என்று கூறும் அந்த ஆய்வு, ஆனால் அந்த மாறுதல்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் தெளிவாக உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் மேலும் சொல்கிறது.