Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதை மாறும் நதிகள்! அழியும் கிராமங்கள்!

பாதை மாறும் நதிகள்! அழியும் கிராமங்கள்!
, புதன், 27 மார்ச் 2013 (15:39 IST)
FILE
புவி வெப்பமடைதல் விளைவான வானிலை மாற்றத்தினால் அருணாச்சலப்பிரதேசத்தின் நதிக்கரை கிராமங்கள் கடந்த சில பத்தாண்டுகளாக மூழ்கியுள்ளன. நதிகள் பல தங்களது பாதையிலிருந்து விலகியுள்ளது.

கிராமங்கள் நீரில் மூழியதற்குக் காரணம் 'திடீர் மழை வெள்ளம்' என்றே அரசங்கம் கூறிவந்தது. பிக்ரம், ரங்கா, போகி உள்ளிட்ட நதிகள் அருணாச்சலப்பிரதேசட்தின் மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இவை தங்களின் வழக்கமான பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் அளவுக்கதிகமான பேய் மழையே!

சிறிய கிராமங்களான ஹட்கோலா, கபிசலா, டெங்கா, பேங்கோ, மற்றும் விக்ரம் சபோரி போன்ற கிராமங்கள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டன.

1963ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆணுவரை நதிகள் சில 300 மீ வரை பாதை மாறியுள்ளன. சில இடங்களில் 1.8கிமீ வரை நதிகள் தங்கள் பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளன என்று புவியியல் தரவுகள் கூறுகின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தின் ராஜீவ் காந்தி பல்கலை ஆய்வாளர் எஸ்.கே.பட்நாயக் கூறுகையில் "மேற்கூறிய விளைவுகளால் கிராமங்கள் பலவற்றின் பகுதிகள் மூழ்கின அல்லது சில இடங்களில் கிராமங்களே முற்றிலும் காணாமல் போயுள்ளன" என்கிறார்.

இதனால் ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்தது மட்டுமல்ல விளை நிலங்கள் பல காலியாகியுள்ளது.

மழை விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மழையின் தீவிரம் மற்றும் நேரம் கடுமையாக அதிகரித்துள்ளது.

வானிலை மற்றங்களினால் அளவுக்கதிகமான மழை பெய்துள்ளது இதனால் நதிகள் பாதைகள் மாறியுள்ளன.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் எப்போதும் இல்லாத தீவிரத்துடன் மழை கொட்டியதில் காடுகளும், விளைநிலங்களும் அழிந்துபோயுள்ளது. இன்றைய தினத்தில் இந்தியாவில் அதிக மழை பதிவாகியுள்ள மாநிலம் அருணாச்சலம் மட்டுமே. ஆண்டுக்கு 3500மிமீ மழை பதிவாகிறது.

இந்த மாற்றங்களினால் அருணாச்சலப்பிரதேசத்தின் 8155 சதுர கிமீ பரப்பளவு வெள்லத்தினால் பாதிக்கக்கூடிய தன்மையை எட்டியுள்ளது.

உலகின் 18 உயிர்ப்பரவல் முக்கிய இடங்களில் அருணாச்சலப்பிரதேசமும் ஒன்று. இப்போது இந்த நதிகளின் போக்கு மாறியுள்ளதால் இவை அழிந்து போயுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil