Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்புக் மோகம் குறைந்து வருகிறதா?

பேஸ்புக் மோகம் குறைந்து வருகிறதா?
, புதன், 16 ஜனவரி 2013 (15:19 IST)
FILE
இப்போதெல்லாம் டைரி எழுதும் பழக்கம் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளங்களுக்கு நகர்ந்துள்ளது. ஆனால் இது வெறும் டைரி மட்டுமல்ல சாதாரண அன்றாட விஷயங்கள் முதல் அறிவார்ந்த வாத விவாதங்கள், கவிதை, கட்டுரை, செய்திகள், கருத்துகள் என்று உலகின் பல விஷயங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டு வந்து கொட்டுவது பேஸ்புக்.

சிலர் இதனை குப்பை என்று கூறுவர். ஒட்டுமொத்த குப்பைகளையும் ஓரிடத்தில் காணவேண்டுமா பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்யுங்கள் என்றெல்லாம் பலர் கேலி செய்வதை பலர் கேட்டிருக்கலாம். ஆனாலும் குப்பையைத் தானே கொட்ட முடியும்?

எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் இந்த சமூக வலைத்தளம் மீது மோகம் குறைந்து வருவதாக சோஷியல் பேங்கர்ஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலிருந்து மட்டும் சுமார் 6 லட்சம் பேர் பேஸ்புக் வலையிலிருந்து விட்டு விலகியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பேஸ்புக் தனது பயனாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 3%-ஐ இழந்துவிட்டதாம்.

பேஸ்புக்கில் சொந்த தகவல்களை பலர் பகிர்ந்து கொள்வதால் அந்தரங்கம் இல்லாமல் ரகசியங்கள் திருடப்படுவதால் சிலரும், மிகவும் அறுவையாக இருக்கிறது என்று அயர்ச்சி காரணமாக பலரும் பேஸ்புக்கிலிருந்து ஓடுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil