Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமாலயப் பனிமலைகளில் பனி வற்றி வருகின்றன!

Advertiesment
இமாலயப் பனிமலைகளில் பனி வற்றி வருகின்றன!
, வியாழன், 20 நவம்பர் 2008 (16:42 IST)
இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்பொழுது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப மாற்றங்களால் அங்கு பனி சேருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், குறைந்தது அரை பில்லியன் (50 கோடி) இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இல்லாமல் போன அந்தக் கதிர்வீச்சு அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையின் விளைவாய் ஏற்படுவது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் உள்ள நைமோனான்யி போன்ற பனிமலைகளால்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து வருகின்றன.

இதே நதிகள், சில இடங்களில், சில மாதங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றியிருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் பனிமலைகளில் புதிதாக பனி உருவாவதில்லை என்பது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழக புவியியல் விஞ்ஞானி லோன்னி தாம்சன், சுமார் 6,050 மீ. உயரமுள்ள பிற பனிமலைகளிலும் இதே நிலை இருந்து வர வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இமாலயம் போல் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள அதி உயர பனிமலைகளிலும் பனி வற்றி வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil