Newsworld News Environment 0809 01 1080901027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புவி வெப்பமடைதலால் வடதுருவம் தீவாகிறது!

Advertiesment
புவி வெப்பமடைதல் வடதுருவம் தீவு நாசா
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:13 IST)
லண்டன்: புவி வெப்பமடைதலின் விளைவாக வரலாற்றில் முதன்முறையாக வடதுருவம் ஒரு தீவாகியுள்ளது.

நாசா வெளியிட்டுள்ள சாட்டிலைட் படங்களில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கும் மேல் அப்பகுதியில் பனி உருகியுள்ளதால், வட-மேற்கு, வட-கிழக்கு நீர்வழிப்பாதைகள் திறந்துள்ளன.
webdunia photoFILE

இதுபோன்று, கப்பல்கள் போகுமளவிற்கு பனி உருகலால் அங்கு நீர்வழிகள் உருவாகியுள்ளது எதிர்பாராத அதிர்ச்சி தரும் நிகழ்வாகும், மேலும் ஆண்டுகள் செல்லச்செல்ல இது மேலும் மோசமடையும் என்று அமெரிக்க தேசிய பனித் தரவு மையத்தின் கடல் பனி நிபுணர் பேராசிரியர் மார்க் செர்ரெஸ் எச்சரித்துள்ளார்.

மேலும் ஆர்க்டிக் பகுதி புவி வெப்பமடைதலால் "மரண சுருள்வட்ட" (Death Spiral) கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளைதை சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கை செய்துள்ளார். அதாவது 2030ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பகுதி முழுதும் பனியற்ற பிரதேசமாக மாறும் அபாயத்தையே அவர் "மரண சுருள்வட்டம்" என்று குறிப்பிடுகிறார்.

ஒரு புறம் இது புவி வெப்பமடைதலால், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதையும், இந்தன் விளைவாக ஏற்படும் மிகப்பெரிய புயல்களையும், மிகப்பெரிய அளவிலான வறட்சிகளையும் நமக்கு அறிவுறுத்தும் அதே வேளையில், ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வட-மேற்கு, வட-கிழக்கு நீர்வழிப்பாதைகள் ஏற்பட்டுள்ளதால் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன என்ற செய்திகளும் வந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள பெலூகா குழுமம், இந்த நீர்வழித் திறப்புகளால் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு செல்லும் வழியில் 4,000 மைல்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil