வானிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான்- கி மூன் வலியுறுத்தினார்.
மெக்சிகோ நாடாளுமன்ற செனட் அவையில் உரையாற்றிய பான்-கி மூன், "வானிலை மாற்றம் என்பது அறிவியலைச் சேர்த்துப் புனையப்பட்ட கதையல்ல; அது உண்மையான நிகழ்வு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
வானிலை மாற்றம், உணவு தானியத் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கியச் சவால்களை இன்றைய உலகம் சந்தித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இவற்றை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
சிறு விவசாயிகளுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வதன் மூலம் உணவுப் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்றார் அவர்.