Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபாய நிலையை எட்டியுள்ள மீத்தேன் கார்பன் மாசு!

Advertiesment
அபாய நிலையை எட்டியுள்ள மீத்தேன் கார்பன் மாசு!
, திங்கள், 19 மே 2008 (13:44 IST)
அண்டார்டிகாவில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளில் கலந்துள்ள மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

புவி வெப்பமடைவதில் கிரீன் ஹவுஸ் வாயு‌க்களின் தாக்கங்களை இந்த ஆய்வு மேலும் உறுதி செய்வதாய் அமைந்துளது.

இந்த புதிய ஆய்வுகள் குறித்து தனது கருத்துக்களை எழுதியுள்ள, ஓரிகான் மாகாண பல்கலைக் கழகத்தின் புவி விஞ்ஞானத் துறையை சேர்ந்த பேராசிரியர் எட்வர்ட் புரூக், "அண்டார்டிகா உறைபனியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த காற்று மாசுகளின் படிவுகள் கலந்திருப்பதற்கு கடந்த கால முன்மாதிரிகள் இல்லை" என்றார்.

அண்டார்டிகாவில் பனி‌ப் பாள‌ங்க‌ளி‌‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள மா‌ற்ற‌ங்க‌ள் ப‌ற்‌றிய இந்த ஆய்வை ஐரோப்பியத் திட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். துருவப் பனிக்கட்டிப் பாள‌ங்க‌ளி‌ல் கல‌ந்‌‌திரு‌க்கு‌ம் காற்று‌க் குமிழிகள், வான்வெளியில் மிதக்கும் மாசுகளின் அளவுகளை கடந்த காலங்களில் நமக்கு தெரியப்படுத்தி வந்துள்ளது. இதனால் புவி தட்ப வெப்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நமக்கு சரியான புரிதல்கள் ஏற்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இயற்கை சுழற்சிகள் கடந்த காலத்தில் பு‌வியை கட்டுப்படுத்தும், புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் சக்திகளை நமக்கு தெரியப்படுத்த உதவியுள்ளது. மேலும் தற்போதைய மாற்றங்களால் ஏற்படும் எதிர்கால பா‌தி‌ப்புகளையு‌ம் இந்த அண்டார்டிகா ப‌னிக்கட்டிகளில் கலந்துள்ள மாசு அளவு கடந்த காலங்களில் நமக்கு காட்டியுள்ளது என்று பேராச்ரியர் புரூக் கூறுகிறார்.

இந்நிலையில் 8 லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அண்டார்டிகா பனிக்கட்டிகளில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு மாசுகள் கலந்திருப்பது பற்றிய இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil