Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. நாடகமாடுகிறது: விஞ்ஞானிகள் சாடல்!

Advertiesment
பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. நாடகமாடுகிறது: விஞ்ஞானிகள் சாடல்!
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (18:47 IST)
நோபல் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பருவ நிலைக் குழு, அனைத்தும் அறிந்திருப்பது போன்று நாடகமாடி வருகிறது என்று மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மீதான தவறான பார்வை குறித்து விஞ்ஞானிகள் கடுமையாக சாடி உள்ளனர்.

உலகளவில் கார்பன்டை ஆக்ஸைடு மாசுபாட்டை குறைப்பதில் இந்த நூற்றாண்டு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு (ஐ.பி.சி.சி.)யின் "அபாயகரமான ஊகங்கள்" என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரோஜர் பிய்ல்கே, பிரிட்டனில் உள்ள தேசிய தட்ப வெப்ப ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாம் விக்லே, மேக்கில் பல்கலைக்கழகத்தின் கிரிஸ்டோபர் கிரீன் ஆகியோர் ஐ.பி.சி.சி.யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"மாசுபாட்டை குறைக்க புதிய தொழில்நுட்பம் தேவை என்று கூறி, எதிர்கால பருவநிலை குறித்து இவ்வமைப்பு தவறான சமிக்ஞை காட்டி வருகிறது. முன்னோடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் எதிர்கால மாசுபாட்டை குறைக்க முடியும் என்று ஊகத்தின் அடிப்படையில் ஆலோசனை கூறி கடினமான விளையாட்டை ஐ.பி.சி.சி. விளையாடுகிறது.

அச்சமூட்டுகிற வகையில் மிகைப்படுத்தும் கருத்துக்களை தெரிவிப்பதால் ஐ.பி.சி.சி. எதிர்மறைமான விளைவுகளசந்திக்கும்" என்று அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

டாக்டர் பிய்ல்கே கூறுகையில், "எரிசக்தி பயன்பாட்டல் ஏற்படும் மாசுபாட்டின் அளவு, ஐ.பி.சி.சி. ஊகித்த அளவை விட அதிகமாகவே உள்ளது. அதற்கு வேகமான பொருளாதாவளர்ச்சியே காரணம். எரிசக்திக்கு அதிக தேவை இருப்பதால் பாரம்பரிய, பழமையான எரிபொருள் முறை பயன்படுத்தப்படுகிறது.

இதனை தற்போதைய திட்டங்களால் ஏற்படுத்திவிட முடியாது. நாம் எதிர் திசையை நோக்கி நகர்ந்து வருகிறோம். இதுபோன்ற சில ஊகங்கள் நிஜ உலகில் நம்மை குருடர்களாக்கி விடலாம். நமது முயற்சியால் பலமான கொள்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil