நரேந்திர மோடியும், குஜராத்தின் தீண்டாமை வன்கொடுமைகளும்!
, புதன், 12 மார்ச் 2014 (15:55 IST)
நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?
நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.அவர் அந்த நூலில் எழுதுகிறார்:
“I do not believe that they are doing this job just to sustain their livelihood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the enlightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by god so, and that his job of cleaning shared continue as a spiritual activity for centuries. This shared have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have choice of adopting any other job or business.”